கெசல்கமு ஓயாவிற்கு அருகில் கார் 300 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து -ஒருவர் பலி – இருவர் படுகாயம்

கெசல்கமு ஓயாவிற்கு அருகில் கார் 300 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து -ஒருவர் பலி – இருவர் படுகாயம்

பலாங்கொடையிலிருந்து பொகவந்தலாவ ஊடாக கண்டி நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் கெசல்கமு ஓயாவிற்கு அருகில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இன்று (17) காலை 8:30 மணியளவில் ஹட்டன் – பகவந்தலாவ பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காரில் பயணித்த இரண்டு பெண்கள் உற்பட மூவர் பலத்த காயமடைந்த நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற போது காரில் நான்கு பேர் பயணித்துள்ளதுடன், காரைச் செலுத்திய சாரதி காயங்களின்றி தப்பித்து வீதிக்கு வந்து விபத்து குறித்து பொகவந்தலாவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்த மூவரும் காருக்குள் சிக்கியிருந்த நிலையில், அருகில் இருந்த தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து பெரும் போராட்டத்திற்கு மத்தியில் அவர்களை மீட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )