லொகு பெட்டியின் சகோதரரான பொடி பெட்டியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

லொகு பெட்டியின் சகோதரரான பொடி பெட்டியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த லொகு பெட்டிஎன்பவரின் சகோதரரான பொடி பெட்டி என்பவரை இலக்கு வைத்து அஹுங்கல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

நேற்று (16) இரவு 11:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொடி பெட்டி த்ரீவீலர் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது, இனந்தெரியாத நபர்களினால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த போதே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் துப்பாக்கிச் சூட்டில் அவருக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )