
பம்பரக்கலை நெடுங்குடியிருப்பு பகுதியில் பாரிய தீப்பரவல் மூன்று வீடுகள் சேதம் – 12 பேர் நிர்கதி
நுவரெலியா – கண்டி பிரதான வீதி பம்பரக்கலை PWD நெடுங்குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீப்பரவலால் மூன்று வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.
தீயில் சேதமாகிய மூன்று வீடுகளிலும் இருந்த 12 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீடுகளில் வசிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் உடைமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
விபத்தின்போது வீட்டில் இருந்தவர்கள், தீ எரிவதை கண்டு கூச்சலிட்டபோது ,அயலவர்கள் மற்றும் தகவல் அறிந்து உரிய இடத்துக்குச் சென்ற நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் ஆகியோர் நீண்ட நேர போராட்டத்திற்குப் தீயை அணைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் நுவரெலியா பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று சந்தித்த நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் சுப்பிரமணியம் ஆனந்தராஜ், கிராம சேவகரின் உதவியுடன் மேலதிக நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

