
இந்தியன் வெல்ஸ் ஓபன் ; இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஜானிக் சின்னர்
இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் , ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சின்னர் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை (16) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஜானிக் சின்னர், அல்காரஸ் அல்லது மெத்வதேவ் ஆகியோரில் ஒருவருடன் மோதவுள்ளார்.
CATEGORIES Sports News

