
களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்
கெத்தெனவிலிருந்து களுத்துறைக்கு செல்லும் பிரதான நீர் விநியோகக் குழாயில் திடீர் கோளாறு காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வஸ்கடுவ, மொல்லிகொட, மொரோந்துடுவ, களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, கட்டுகுருந்த, நாகொட மற்றும் பொம்புவல ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற்று வருவதுடன், நாளை (16) காலை 10.00 மணிக்கு நீர் விநியோகம் மீண்டும் சீராக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு 1939 என்ற குறுகிய தொலைபேசி எண்ணை அழைத்து அறிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

