
கல்கிசை சந்தியில் பேருந்தும் காரும் மோதி விபத்து
கல்கிசை சந்தியில் இன்று (15) அதிகாலை பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த, சுற்றுலா சென்றவர்கள் திரும்பிக் கொண்டிருந்த பேருந்தும் காரும் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் காருக்குப் பலத்த சேதம் ஏற்பட்ட போதிலும், அதிலிருந்த பாதுகாப்பு பலூன்கள் உடனடியாக செயல்பட்டதால் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
CATEGORIES Sri Lanka

