
களுத்துறை உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகத்தில் தீப்பரவல்
களுத்துறை பிரதேச உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகத்தில் நேற்று (30) இரவு தீப்பரவலொன்று ஏற்பட்டுள்ளது.
அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள கணினி தரவுத்தளக் கட்டமைப்பு உள்ள பகுதியிலேயே இந்தத் தீ பரவத் தொடங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் அல்லது அதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
களுத்துறை நகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் தற்போது தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

