
இறக்குமதி பால் மாவின் விலை அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, புதிய கையிருப்புகள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் நிலையில், 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலை 50 ரூபாவால் உயர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஒரு கிலோகிராம் பால் மா பக்கெட்டின் விலை 125 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உலக சந்தை விலை உயர்வு மற்றும் இறக்குமதி செலவின அதிகரிப்பு காரணமாக இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

