
சாமர சம்பத் தசநாயக்கவை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பாராளுமன்ற வளாகத்திலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான அறிவுறுத்தலை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு சபாநாயகர் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அமர்வின் போது ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலையைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

