City of Dreams நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பின் ஒரு புதிய மைல்கல்

City of Dreams நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பின் ஒரு புதிய மைல்கல்

சிட்டி ஒப் ட்ரீம்ஸ் City of Dreams ஆடம்பர ஹோட்டல் உலகத் தரம் வாய்ந்த கேசினோ, கேமிங் வளாகம் நேற்று கொழும்பில் திறந்து வைக்கப்பட்டது .

நேற்றிரவு நடைபெற்ற இதன் திறப்பு விழாவில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் பங்கேற்றமை அநேகரின் கவனத்தை ஏற்பதாக அமைந்தது.

மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஒருங்கிணைப்பில் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த ரெசோட் திட்டத்தில் உலகத் தரம் வாய்ந்த கேசினோ, கேமிங் வளாகம் ஆடம்பரமான ஹோட்டல் மற்றும் பிரீமியம் ஷாப்பிங் மால் ஆகியவை நிறுவப்பட்டுள்ளன .

சீனாவிற்கு மக்காவ் எப்படியோ அதுபோன்று இலங்கை இந்தியாவிற்கு என்ற நிலை உருவாகப்போகிறது என நேற்று தெற்காசியாவின் சொத்து என குறிப்பிடப்படும் சிட்டி ஒப் ட்ரீம்ஸ் கேமிங் சந்தை வளாகத் திறப்புவிழாவின் போது மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் லிமிடெட் தலைவர் லாரன்ஸ் ஹோவின் தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய கேமிங் சந்தையாக சீனாவின் “மக்காவ் உள்ளது .
கொழும்பு இந்தியாவிற்கு மிக அருகில் உள்ள இடமாகும்,
இது போன்ற ஒருங்கிணைந்த ரிசார்ட் நகரத்தின் வளர்ச்சிக்கு இந்த அமைவிடம் அதிக ஆற்றலை வழங்குகிறது,” என அவர் மேலும் கூறினார்.

பத்து வருடங்களுக்கும் மேலாக நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த ஆடம்பரமான சொத்தில் இரண்டு ஹோட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வயது வந்தோர் விளையாட்டு வசதிகள், உணவகங்கள், ஒரு ஷாப்பிங் மால் அனைத்தும் இங்கு நிறுவப்பட்டுள்ளன .இந்தியா, மத்திய கிழக்கு, ரஷ்யா மற்றும் சீனாவிலிருந்து வரும் பணக்கார சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் city of dreams வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், அதற்கான நுழைவாயிலாக கொழும்பு அமைந்துள்ளது எனவும் மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் லிமிடெட் தலைவர் லாரன்ஸ் ஹோவின் தெரிவித்தார்.

“குறிப்பாக இந்தியாவில் பணக்கார நடுத்தர மற்றும் உயர் வகுப்பினர் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் வளச்சியடைந்து வருகின்றது. உயர் தொழிநுட்பம் கொண்டு வடிவமைக்கப்பட்ட எமது வலையமைப்பு இலங்கை போன்ற தனித்துவமான அமைவிடத்தில் உலகத்தரம் வாய்ந்த அனுபவங்களைத் பெற்றுக் கொள்ள விரும்பும் உயர்நிலை சர்வதேச பயணிகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர் கிருஷ்ணா பாலேந்திரா உரையாற்றும் போது பல வருட அரசியல் கொந்தளிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இலங்கை திறந்த, நிலையான மற்றும் முதலீடு செய்யக்கூடிய நிலையை எட்டியுள்ளது என்பதற்கான வலுவான சமிக்ஞையை உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு அனுப்பும் ஒரு பிரம்மாண்ட நிகழ்வு இதுவென சுட்டிக்காட்டினார்.

“1.2 பில்லியன் டாலர் முதலீட்டைக் கொண்ட இந்த திட்டம் இலங்கைப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியின் விளைவை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமானம், சில்லறை விற்பனை, தொழில்நுட்பம், விருந்தோம்பல், அந்நிய நேரடி முதலீடு ஆகியவற்றில் வேலைவாய்ப்புகள்,” என்பவை தொடர்பில் பாலேந்திரா கூறினார்.

இது லட்சியத் திட்டம் எனவும் இந்த திட்டம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் ஒரு முக்கிய சக்தியாக அமையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“இன்று ஒரு மைல்கல் திட்டத்தின் தொடக்கம் மட்டுமல்ல
இது இலங்கைக்கு ஒரு முக்கிய தருணம். இது நமது நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை முதலீடு மற்றும் இது இலங்கையின் எதிர்காலத்தின் மீதான எங்கள் நம்பிக்கையின் பிரகடனம்… பொருளாதாரத் தடைகள் முதல் உலகளாவிய தொற்றுநோய் வரையிலான ஒவ்வொரு சவாலின் போதும்,பின்வாங்குவதை விட முதலீடு செய்வதைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் .
ஆடம்பர விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்குகளில் மெல்கோவின் அனுபவத்தைப் பயன்படுத்தி “உலகளாவிய நகரங்களின் வரைபடத்தில் கொழும்பின் இலங்கையின் உலகளாவிய சுயமதிப்பை உயர்த்த உதவும் மற்றும் அதன் சுற்றுலா பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் .
படிப்படியான இந்த திட்டத்தின் வளர்ச்சி உள்ளூர் தயாரிப்புகள், சேவைகள் மற்றும் விநியோகத்திற்கான தேவையை பூர்த்திசெய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு கூட்டு முயற்சியாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என முதலீட்டாளர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

நேற்று முந்தினம் நடைபெற்ற இதன் அதிகாரப்பூர்வமாக பிரமாண்டமான விழாவில் திறப்புவிழாவில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார் .

முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்ரிபால சிறிசேன ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிரிஷான் பாலேந்திரா, ஜனாதிபதியையும் சிறப்பு விருந்தினர்களையும் நிகழ்வில் வரவேற்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )