
முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கைது
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் டேவிட் வார்னர், மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கிழக்கு சிட்னியின் மரூப்ரா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பொலிஸ் சோதனையின் போது, 39 வயதான வார்னர் பிடிபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குள்ள அதிகாரிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES Sports News

