
“சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயார்” ; விமல் வீரவன்ச
ரணவிரு நினைவிடத்திற்கு அருகில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக எத்தகைய சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இன்று (20) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு வருகை தந்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
ரணவிரு நினைவிடத்திற்கு அருகே நடைபெற்ற சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படுமா ? என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், “போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் பூமாலை ஏந்தி மரியாதை செலுத்த முயன்றவர்களின் செயலுக்கு எதிராக வாளை உயர்த்தி வழக்கு தொடரப்பட்டாலும், அத்தகைய சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நாங்கள் தயங்கமாட்டோம்,” என தெரிவித்தார்.

