கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் இளைஞன் ஒருவர் கைது

கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் இளைஞன் ஒருவர் கைது

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சோதனையின் போது, சந்தேக நபரிடமிருந்து 108 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 68 கிராம் 320 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் ஜா-எல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )