யாழில் குடும்பஸ்தர் மீது கத்திக்குத்து

யாழில் குடும்பஸ்தர் மீது கத்திக்குத்து

மதுபான சாலைக்கு அருகில் குடும்பஸ்தர் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு விட்டு இருவர் தப்பி சென்றுள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.

தாவடி பகுதியில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் நேற்றைய தினம் (23) மாலை இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவத்தில் , சுதுமலை பகுதியை சேர்ந்த நேசராஜன் சர்வேந்திரன் (வயது 51) என்பவரே படுகாயமடைந்த நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )