சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு சோஷலிசம் இளைஞர் சங்கம் யாழ்ப்பாணத்திற்கு வருகை

சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு சோஷலிசம் இளைஞர் சங்கம் யாழ்ப்பாணத்திற்கு வருகை

சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு நேற்று (23) சோஷலிசம் இளைஞர் சங்கம் யாழ் தேவி புகையிரதத்தில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

குறித்த பயணத்தில் குருநாகல் புகையிரத நிலையம் மற்றும் அநுராதபுர புகையிரத நிலையம் ஆகையவற்றில் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

IMG 20250723 WA0063

யாழ்ப்பாணத்தை வந்தடைந்தவர்கள், யாழ்ப்பாண புகையிரத நிலைய நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை வழங்கி வைத்தனர்.

IMG 20250723 WA0076

குறித்த குழுவுடன் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், இளைஞர் விவாகார பரத அமைச்சர் ஏரங்க குனசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.

குறித்த வருகையின் நினைவாக மரக்கன்றும் நாட்டி வைக்கப்பட்டது.

IMG 20250723 WA0071

அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் இருந்து ரிம்பர் மண்டபம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு, அங்கு கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.

இன்றைய தினம் எழுவைதீவுக்கு பயணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு 200 பனங்கன்று நடுகை செய்யப்படவுள்ளதுடன், எழுவைதீவு பாடசாலைக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள், மற்றும் தீவின் இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )