கனமழையால் 15 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

கனமழையால் 15 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 15 சிறிய மற்றும் பெரிய நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ராஜாங்கனை, சியம்பலங்கமுவ, தெதுரு ஓயா நீர்த்தேக்கம், பத்தலகொட, ஹத்வதுன ஓயா மற்றும் யோத வாவி நீர்த்தேக்கங்கள் உள்ளிட்டவை வான் பாய்வதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், வினாடிக்கு 5087 கன அடி நீர் கொள்ளளவு நீர் கலா ஓயாவிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.

தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக அந்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் எனவும் அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களுக்குத் எச்சரிக்கை விடுத்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )