
கண்டியில் மூடப்பட்ட வீதிகள்நிலச்சரிவு அபாயத்தால் வெளியேற்றப்பட்ட குடும்பங்கள்அவசர நிலைமைகளில் 117க்கு அழையுங்கள்
கனமழை மற்றும் மண் சரிவால் கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் வீதிகள் மூடப்பட்டன .
பேரா தனை வீதியில் கஹகொல்ல – ஹல்லோலுவ (Gohagoda and Halloluwa) பாறை சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
பெனிதெனிய – தவுலகல வீதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக வீதி மூடப்பட்டுள்ளது.
முருத்தலாவ – கன்னொருவ பகுதியிலும் பாறை சரிவு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை ,கண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு அபாயம் காரணமாக உடதும்பர பம்பரபெத்த பகுதியிலிருந்து 40 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
மடுவன்வெல மற்றும் மாத்தளை பிரதேசத்தின் கோவில்கந்த பகுதியில் 2 குடும்பங்களும் கழுகல்தென்ன பகுதியில் 5 குடும்பங்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
யடினுவர, தொலுவ, உடதும்பர மற்றும் கங்க இஹல கோரளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 150 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், அப்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் ,
வெள்ளம் தேங்கியுள்ள வீதிகள் மற்றும் சரிவான மலைப்பாங்கான பகுதிகளில் பயணப்பதைத் தவிர்க்குமாரும்
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர உதவிக்கு 117 என்ற இலக்கத்தைத் தொடர்பு கொள்லுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

