சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது

சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது

அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனப்பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்மீமன விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் நேற்று (29) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின்போது சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 100 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இரு நபர்களும் அக்மீமன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் காலி பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 40 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்மீமன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )