ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தின் தெற்குப் பகுதித் தீவுகளில் இன்று (20) ரிக்டர் அளவுகோலில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும், சுனாமி அபாயம் இல்லை எனவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்ச்சேதமோ சொத்துச் சேதமோ எதுவும் பதிவாகவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )