‘சுரக்சா’ மாணவர் காப்புறுதி திட்டம் தொடரும்

‘சுரக்சா’ மாணவர் காப்புறுதி திட்டம் தொடரும்

பாடசாலை மாணவர்களுக்காக நடைமுறையில் உள்ள ‘சுரக்சா’ காப்புறுதித் திட்டத்தின் காலக்கெடு 2027ஆம் ஆண்டுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், 2027ஆம் ஆண்டுக்குப் பின்னரும் இந்த காப்புறுதித் திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வின் போது, உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, திட்டம் இடைநிறுத்தம் இன்றி தொடரும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )