ஈரான் பயணிக்கும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி

ஈரான் பயணிக்கும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி

பாகிஸ்தான் இராணுவத் தளபதிஅசிம் முனீர் (Asim Munir)தலைமையிலான பாகிஸ்தான் இராணுவ உயர்மட்ட குழு, தெஹ்ரான் நோக்கி பயணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இதற்கு முன்னதாக, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி (Mohsin Naqvi) தெஹ்ரானுக்கு பயணமானதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரே வாரத்தில் அவர் மேற்கொள்ளும் இரண்டாவது ஈரான் விஜயம் இதுவாகும்.

கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி இடம்பெற்ற போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பாகிஸ்தான் நடுநிலை வகித்திருந்த போதிலும், இரு தரப்புகளிடையேயான கடும் வார்த்தைப் போரின் மத்தியில் இராஜதந்திர தொடர்புகளை தொடர்வதில் சவால்கள் நீடிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிராந்திய பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், நிலைமையை சமநிலைப்படுத்தும் முயற்சியாக பாகிஸ்தான் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )