
பிரசன்ன ரணவீர மனு ; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிடக் கோரி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த மனுவை தொடரலாமா, வேண்டாமா? என்பது குறித்து ஏப்ரல் 28 ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த மனுவை இன்று (28) பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
களனி பகுதியில் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்தை போலி பத்திரம் மூலம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, தான் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.