
லாஃப் எரிவாயுவின் விலை அதிகரிப்பு
லாஃப் நிறுவனம் தனது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை நேற்று (31) நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளது.
அதன்படி 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 420 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதன் புதிய விலை 4,100 ஆகும்.
அத்தோடு 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 168 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதன் புதிய விலை 1,645 ரூபாவாகும்.