மீண்டும் பொலிஸ் சேவையில் ஷானி அபேசேகர

மீண்டும் பொலிஸ் சேவையில் ஷானி அபேசேகர

ஓய்வுபெற்ற பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, ஒரு வருட ஒப்பந்த சேவை அடிப்படையில் பொலிஸ் திணைக்களத்தில் மீள இணைக்கப்பட்டுள்ளார்.

நேற்று (10) இடம்பெற்ற தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கூட்டத்தின் பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஷானி அபேசேகர ஒப்பந்த சேவையின் அடிப்படையில் ஒரு வருட சேவைக் காலத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தியுள்ளார்.  

கடந்த காலங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி பாதியில் நிறுத்தப்பட்டிருந்த விசாரணைகள் ஷானி அபேசேகரவின் முயற்சியால் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விசாரணைகளின் அடிப்படையில் விரைவில் சிலர் கைது செய்யப்படலாமென்றும் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)