இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து வாக்களியுங்கள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து வாக்களியுங்கள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு காங்கிரஸின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் ஜீவன் தொண்டமான், நோர்வூட் பிரதேசத்துக்குட்பட்ட நிவ்வெலி, வெஞ்சர், லோரன்ஸ், சென் ஜோன் டிலரி, நோர்வூட் தோட்டம், கெக்கர்ஸ்வோல்ட், ரொக்வூட் ஆகிய தோட்டங்களில் நேற்று (16) தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

கடந்த நான்கு வருடங்களில் தனக்கு கிடைத்த ஒதுக்கீட்டின்படி பெருந்தோட்ட மக்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தான் உழைத்ததாகவும், இதுவரையில் தோட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வாய்ப்பு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழ் மட்டுமே கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் இதொகாவின் சார்பில் ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன், ப.சக்திவேல் ஆகியோர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)