
வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்
அமெரிக்கா வெள்ளை மாளிகையில், திங்கட்கிழமை (28), தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
இதன்போது, குத்துவிளக்கேற்றி ஜனாதிபதி ஜோ பைடன் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். மேலும், ஜனாதிபதி ஜோ பைடன் தனது தீபாவளி வாழ்த்தை தெரிவித்தார்.
வெள்ளை மாளிகை பெருமையுடன் தீபாவளியைக் கொண்டாடியது குறித்து குறிப்பிட்டு அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் , “ அமெரிக்காவில் உள்ள தெற்கு ஆசிய சமூகம் அமெரிக்காவின் மேம்பாட்டுக்கு அதிக பங்காற்றியுள்ளது. உலகத்திலேயே மிகவும் வேகமாக வளரும் சமூகமாக இது உள்ளது. பன்முகத்தன்மை வாய்ந்த அமெரிக்கா தற்போதுள்ள நிலைமைக்கு எப்படி வந்தது என்பதை ஒருபோதும் மறக்காது” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES World News