குருநானக்கின் பிறந்தநாளை முன்னிட்டு நினைவு நாணயத்தை வெளியிட்ட பாகிஸ்தான்

குருநானக்கின் பிறந்தநாளை முன்னிட்டு நினைவு நாணயத்தை வெளியிட்ட பாகிஸ்தான்

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரான குருநானக் தேவின் 555-வது பிறந்த நாளை கடந்த நவம்பர் 15 ஆம் திகதி உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர்.

இந்நிலையில், குருநானக்கின் 555வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நினைவு நாணயத்தை  பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது.

சிறப்பு நாணய வெளியீட்டு நிகழ்ச்சியில் 2,500க்கும் மேற்பட்ட இந்திய சீக்கிய யாத்ரீகர்கள் கலந்து கொண்டனர்.

30 மிமீ விட்டம் மற்றும் 13.5 கிராம் எடை கொண்ட இந்த சிறப்பு நாணயம் 79 சதவீதம் பித்தளை, 20 சதவீதம் துத்தநாகம் மற்றும் 1 சதவீதம் நிக்கலால் செய்யப்பட்டுள்ளது.

இந்த நினைவு நாணயம் ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தானின் அனைத்து கிளைகளிலும் உள்ள எக்ஸ்சேஞ்ச் கவுண்டர்களில் கிடைக்கும் என்று பாகிஸ்தானின் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

குருநானக்கின் 550வது பிறந்தநாளை முன்னிட்டு பாகிஸ்தான் இதேபோன்ற சிறப்பு நாணயத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)