
உயர் தரப் பரீட்சைகள் நாளை மீள ஆரம்பம்
சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2024 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சைகள் நாளை (04) மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 27ஆம் திகதி முதல் 6 நாட்களுக்கு பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டன.
திருத்தப்பட்ட கால அட்டவணையின்படி, முதலில் டிசம்பர் 4 ஆம் திகதி பாடங்கள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.