
கேரள கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது
கொட்டாவ ஹோகந்தர வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் பெண் ஒருவர் கேரள கஞ்சாவுடன் இன்று (19) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் மற்றும் 66 கிலோ கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக கொட்டாவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka