லொஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீயில் சிக்கி ஐந்து பேர் பலி !

லொஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீயில் சிக்கி ஐந்து பேர் பலி !

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் உள்ள 4 பிராந்தியங்களில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக இதுவரையில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த காட்டுத்தீயினால் இதுவரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க் கிழமை முதல் பரவி வரும் இந்த தீப்பரவல், லொஸ் ஏஞ்சலிஸ் வரலாற்றில் மிகப் பெரிய தீப்பரவல் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளனர்.

குறிப்பாக லொஸ் ஏஞ்சலிஸின் பாலிசேட்ஸ் மற்றும் ஈட்டன் பகுதிகளில் 137,000 பேர் தங்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், லொஸ் ஏஞ்சலிஸ் – கவுண்டியில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மின்ன்சாரம் தடைப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் காட்டுத்தீ காரணமாக சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை காற்றின் வேகம் குறையாததால் கலிபோர்னியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக ஆளுநர் கவின் நியூசம் தெரிவித்துள்மையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)