இலங்கை கிரிக்கெட்டின் புதிய செயலி அறிமுகம்

இலங்கை கிரிக்கெட்டின் புதிய செயலி அறிமுகம்

இலங்கை கிரிக்கெட் சபையானது ‘ஸ்ரீ லங்கா கிரிக்கெட் லைவ்’ என்ற பெயரில் கையடக்க தொலைபேசி செயலி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்வதற்கு இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலியின் மூலமாக நேரடி ஓட்ட விபரங்கள், நேரடி ஒளிபரப்பு, போட்டியின் ஹைலைட்ஸ் காணொளி, போட்டி அட்டவணைகள், முடிவுகள் மற்றும் கிரிக்கெட் சபையுடன் தொடர்புடைய குழாம் அறிவிப்பு, செய்திகள் போன்றவற்றை ரசிகர்கள் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த இந்த செயலியை கூகுல் பிளே ஸ்டோர் மற்றும் எப் ஸ்டோர் போன்றவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். குறித்த செயலியை QR குறியீடு மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)