
போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது
பிலியந்தலை, ஹொரணை வீதியில் உள்ள விடுதிக்கு முன்னால் நேற்று (22) இரவு முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் சிறப்பு அதிரடிப்படைதெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் பரிசோதகரிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சேவையை விட்டு வெளியேறியவர் என்பது தெரியவந்துள்ளதுடன் சந்தேக நபரிடம் 12,320 மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka