
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக் குழு அறிவித்துள்ளது.
குறித்த தொடரில் சரித் அசலங்க இலங்கை அணியை வழிநடத்தவுள்ளார்.
இந்தத் தொடரின் முதல் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதியும், இரண்டாவது போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதியும் கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.
இந்த இரண்டு போட்டிகளும் பகல் நேரப் போட்டிகளாக நடத்தப்படவுள்ளன.
இந்த போட்டியினை காலை 10 மணிக்கு ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

CATEGORIES Sports News