
புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மஹாபொல பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவு ரூ.5,000 லிருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்படும் என தெரிவித்தார்.
அத்துடன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான தரம் 5 புலமைப்பரிசில் கொடுப்பனவு ரூ.750 லிருந்து ரூ.1,500 ஆகவும் அதிகரிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
CATEGORIES Sri Lanka