
போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம், இலந்தைக்குளம் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் குறித்த நபரிடமிருந்து 30 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka