சாம்பியன்ஸ் டிராபி அரைஇறுதி ; ஆஸ்திரேலியாவை – இந்தியா அணிகள் மோதல்

சாம்பியன்ஸ் டிராபி அரைஇறுதி ; ஆஸ்திரேலியாவை – இந்தியா அணிகள் மோதல்

ஐ.சி.சி செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

டுபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி பிற்பகல் 2.30மணிக்கு ஆரம்பமாகிறது.

ஐ.சி.சி செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்த இரு அணிகளுமே லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் அரை இறுதி சுற்றில் கால்பதித்துள்ளன.

‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மேலும் கடைசி ஆட்டத்தில் நியூஸிலாந்தை 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மறுபுறம் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியிருந்தது.

இதன் பின்னர் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக மோத இருந்த ஆட்டங்கள் மழை காரணமாக இரத்தாகியிருந்தது.

ஐசிசி தொடர்களில் அவுஸ்திரேலியா அணி எப்போதுமே கூடுதல் உத்வேகத்துடன் செயல்படும்.

அதற்கமைவாக இம் முறை அவுஸ்திரேலியா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இல்லாமலேயே அந்த அணி அரை இறுதி சுற்றில் கால்பதித்துள்ளது.

துபாய் ஆடுகளத்தை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சுக்கும் சாதகமாக இல்லை, சுழற்பந்து வீச்சுக்கும் சாதகமாக இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஏனெனில் இந்த ஆடுகளம் 270 முதல் 285 ஓட்டங்கள் வரை மட்டுமே எடுக்கக்கூடியது.

இருப்பினும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் நிலைமைக்கு தகுந்தவாறு பொறுமையுடன் செயல்பட்டு விக்கெட்களை வீழ்த்துவதே அந்த அணிக்கு பலமாக மாறியுள்ளது.

மேலும் கடந்த 2023ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணி அவுஸ்திரேலியா அணியிடம்
அடைந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)