
மித்தெனிய துப்பாக்கிச்சூடு ; பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது
மித்தெனிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மித்தெனிய சந்தியில் தனது குழந்தைகள் இருவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவரை இலக்கு வைத்து இனந்தெரியாத குழுவினரால் கடந்த 18ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தந்தை மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரின் மகள் மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்பான வீரகெட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள மித்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று (03) மாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஜூலம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களுக்கு 12 T-56 துப்பாக்கி வெடிமருந்துகளை இந்த சந்தேக நபர் வழங்கியதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.