சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி

சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி

மூன்று நாள் சுற்றுப்பயணமாக குஜராத் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (04) ஆனந்த அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவைப் பார்வையிட்டு திறந்து வைத்தார்.

2,000 க்கும் மேற்பட்ட உயிரினங்களுக்கும், 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட அழிந்து வரும் மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளான விலங்குகளை மீட்டு வந்தாரா பாதுகாத்து வருகிறது.

வந்தாரா அதிநவீன விலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் ரிலையன்ஸ் ஜாம்நகர் சுத்திகரிப்பு வளாகத்தில் 3000 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்துள்ளது

வந்தராவில் உள்ள வன விலங்குகளுடன் பிரதமர் மோடி நேரம் செலவிட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

அந்த வீடியோவில், பிரதமர் மோடி, ஒராங்குட்டான்கள், ஆசிய சிங்கக் குட்டிகள், வெள்ளை சிங்கக் குட்டி உள்ளிட்ட விலங்குகளுடன் விளையாடி உணவு அளிக்கிறார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)