முகம் முழுக்க முடி வளர்த்து கின்னஸில் இடம்பிடித்த  இளைஞர்

முகம் முழுக்க முடி வளர்த்து கின்னஸில் இடம்பிடித்த இளைஞர்

உலகிலேயே முகத்தில் அதிக முடி கொண்டவராக இந்தியாவை சேர்ந்த 18 வயது இளைஞர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

லலித் படிதார் என்ற இளைஞர் ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 201.72 முடியுடன் வியக்கத்தக்க சாதனை படைத்துள்ளார்.

38

ஹைப்பர் டிரிகோசிஸ் என்று அழைக்கப்படும் அரிய மருத்துவ நிலை காரணமாக லலித் படிதார் முகத்தில் 95 சதவீதத்திற்கும் அதிகமான முடி உள்ளது. கின்னஸ் உலக சாதனை தரவுகளின் படி, உலகளவில் பதிவான சுமார் 50 ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகளில் படிதார் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.

முகம் முழுக்க அதிக முடி கொண்ட படிதார் தனது ஆரம்ப பள்ளி நாட்களில் அவர் எதிர்கொண்ட சவால்களை விவரித்தார்.

அப்போது, “முதலில் சில நாட்கள் நன்றாக இல்லை. எனது வகுப்பை சேர்ந்த சக தோழர்கள் என் தோற்றத்தைக் கண்டு பயந்தனர். காலப்போக்கில், அவர்கள் அவரது முகத்தில் உள்ள முடியை தவிர்த்து என்னை பார்க்கத் தொடங்கினர்,” என்று கூறினார்.

“அவர்கள் என்னை பற்றி அறிந்து கொள்ள தொடங்கியபோது, என்னுடன் பேசிய பிறகு, நான் அவர்களை விட வித்தியாசமாக இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். வெளிப்புற தோற்றத்தில் நான் வித்தியாசமாகத் தெரிந்தேன், ஆனால் நான் உள்ளே எந்த வித்தியாசமும் இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

சிலர் தன்னை நன்றாக நடத்தவில்லை என்றாலும், இதுபோன்ற சம்பவங்கள் அரிதானவை தான் என்று படிதர் கூறினார். பெரும்பாலானவர்கள் தன்னிடம் கருணை காட்டுகிறார்கள். ஆனால் அது நபருக்கு நபர் வேறுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)