செவ்வந்தி தொடர்பில் இந்திய புலனாய்வு துறைக்கு தகவல் !

செவ்வந்தி தொடர்பில் இந்திய புலனாய்வு துறைக்கு தகவல் !

கொழும்பு – புதுக்கடை நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் பெண் இஷாரா செவ்வந்தி, படகு மூலம் கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதன்படி, அவர் தொடர்பான அனைத்து தகவல்களையும் இந்திய புலனாய்வு அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ள இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அந்தப் பெண் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் கிட்டத்தட்ட இருநூறு இடங்களில் சோதனை நடத்திய போதிலும் அவர் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

சந்தேகநபரான பெண் தொலைபேசி பாவனையையும் நிறுத்தியுள்ளதால், அவர் தொடர்பான தடயங்களை கண்டுபிடிப்பதில் பொலிஸாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில், தற்போது அவர் தென் மாகாண கடற்கரை வழியாக நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற பாரிய சந்தேகம் எழுந்துள்ளதாக மேலும் குறிப்பிடப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)