9 பேருடன் பயணித்த முச்சக்கரவண்டி விபத்து : மூவர் பலி

9 பேருடன் பயணித்த முச்சக்கரவண்டி விபத்து : மூவர் பலி

முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதிய விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று (09) மாதம்பே – கலஹிடியாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது

சம்பவத்தின் போது முச்சக்கர வண்டியில் சாரதி உட்பட 9 பேர் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்தின் போது காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி உட்பட இரு ஆண்கள், இரு சிறுவர்கள் மற்றும் இரு சிறுமிகள் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலவில தேவாலயத்தில் வருடாந்த திருவிழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)