
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் களமிறங்கும் சமல் ராஜபக்ச
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மக்கள் கோரும் பகுதியில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இன்று (09) தங்காலையிலுள்ள கார்ல்டன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.