
தபால் மூல வாக்களிப்பு ; விண்ணப்ப காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று (12) நள்ளிரவு 12.00 மணியுடன் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள், சான்றளிக்கும் அதிகாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிப் பகுதிக்கான மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
வேட்புமனு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளின் நியமனக் கடிதங்களை மார்ச் 14 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு முன்னர் ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனங்களின் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், எதிர்வரும் மார்ச் 13 ஆம் திகதி போயா தினமாக இருந்தாலும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களும் திறந்திருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.