
பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, முதலாம் தவணைக்காக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம், பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளுக்காக ஏப்ரல் 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka