முதலாவது T20 போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி

முதலாவது T20 போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி

நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதலாவது T20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி 18.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

நியூசிலாந்து மகளிர் அணி சார்பாக Emma McLeod 44 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். 

இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில் மல்கி மாதரா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

பின்னர், 102 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை மகளிர் அணி, சமரி அத்தபத்து ஆட்டமிழக்காமல் பெற்ற 64 ஓட்டங்களின் உதவியுடன் 14.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. 

இந்த வெற்றியின் ஊடாக 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் இலங்கை மகளிர் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)