
5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் சம்மாந்துறையில் கைது!
5 வருடங்களாக அக்கரைப்பற்று பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (14) சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பொலிஸாரினால் 2020 ஆண்டு முதல் கடந்த 5 வருடங்களாக திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் திறந்த பிடியாணை மூலம் தேடப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர் சம்மாந்துறை பிரதேசத்தில் நடமாடுவதாக சம்மாந்துறை பொலிஸ் விசேட புலனாய்வு அதிகாரிகளினால் சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.