ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்படுமா ?  பட்டலந்த கொலைகளுக்கு நீதி கிடைக்குமா ?

ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்படுமா ? பட்டலந்த கொலைகளுக்கு நீதி கிடைக்குமா ?

நீண்ட காலமாக விசாரணைக்குவராமல் இருந்த பட்டலந்த விசாரணை அறிக்கையை தற்போதைய அரசாங்கம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது .

இந்த விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவிற்கு ஏற்படப்போகும் சட்டரீதியான விளைவுகளைஅவரால் எதிர்கொள்ள முடியுமா என கேள்வி எழுந்துள்ளது .

பட்டலந்த சித்தரவதை முகாம் அட்டூழியங்கள் தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவின் கூற்றுப்படி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,தனது குடிமையை இழப்பாரா என கேள்வி எழுந்துள்ளது .

பத்தாண்டுகளுக்குப் பிறகு பட்டலந்த அறிக்கை இறுதியாக தற்போதய அரசாங்கம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான முனைப்புகளை காட்டியுள்ளது .

பல வருட அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, பட்டலந்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை 2025 , மார்ச் 14 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கை தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைக்களை மேற்கொள்வதற்காக , சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார் .

இந்த விசாரணை அறிக்கையில் உள்ள விடயங்கள் தொடர்பில் இரண்டு நாட்களுக்கு பாராளுமன்றதில் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் அறிவித்தார்.

1995 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்ட பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் , 1980 களின் பிற்பகுதியில் பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்தொகுதியில் கடுமையான மனித உரிமை மீறல்கள் – சட்டவிரோத தடுப்புக்காவல்கள், சித்திரவதைகள், படுகொலைகள் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது .
இந்த அறிக்கையில் இந்த காலகட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பிலும் விசாரணை செய்து அந்த விபரங்களும் உள்ளடக்கப்பட்டன .

அதன் இறுதி அறிக்கை 1998 இல் சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்கவிடம் ஒப்படைக்கப்பட்டது .

அதன் பின்னர் 2000 ஆண்டில் ஒரு அறிக்கையாக மட்டுமே இது வெளியிடப்பட்டது, ஆனால் இது வரை, சட்டத்தின் முன் விசாரணைக்கு கொண்டுவரப்படவில்லை.
பட்டலந்த விவாகம் தொடர்பில் பிமல் ரத்நாயக்க கடந்த அரசாங்கங்கள் குறித்து தமது கடுமையான கண்டனங்களை தெரிவித்ததுடன் ,ஜே.வி.பி கிளர்ச்சிக்கு எதிரான மிருகத்தனமான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக, பட்டலந்தாவில் சித்திரவதைக் கூடங்கள் காணப்பட்டதாக குற்றம்சாட்டினார் .

1977 தொடங்கி 1994 வரை ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி காலத்தில் அரச அனுசரணையுடன் இந்த மனித உரிமை மீறல் குற்றங்கள் இடம்பெற்றதாக சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக் க தெரிவித்துள்ளார் .

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்திலேயே இந்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும் சட்ட நடவடிக்கைகள் எடுக்க அவர் தவறியதாக பிமல் ரத்னாயக சுட்டிக்காட்டினார்.

பட்டலந்த மோசமான வரலாற்றை சுட்டிக்காட்டிய ரத்நாயக்க, தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்தின் கீழ், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் “இனியும் தாமதம் ஏற்படாது” என உறுதியளித்தார்

கடந்த வாரம், அல் ஜசீரா தொலைக்காட்சியில் ஹெட் டு ஹெட் நேர்காணல் நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சர்ச்சைக்குரிய பட்டலந்த விவகாரம் தொடர்பில் காரசாரமாக கேள்வியெழுப்பட்டது

அந்த கேள்விகளுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதிலளித்த விதம் அவரின் தடுமாற்றங்கள் அதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் எழுந்த சர்ச்சைகளையடுத்து இந்த அறிக்கை கவனத்திற்கு வந்தது . . இந்த அறிக்கை தொடர்பில் விரைவான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் முன்வந்துள்ளது
நீண்ட காலமாக மறைக்கப்பட்ட பட்டலந்த விசாரணை அறிக்கையை பாராளுமன்றத்திற்குக் கொண்டுவருமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்,
பட்டலந்த வதை முகாம் தொடர்பில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பாராதூரமான குற்றச்சாட்டுகள், மனிதர்களின் மீது பிரயோகிக்கப்பட்ட மிருகத்தனத்தனமான சித்ரவதையாக பார்க்கப்படுகிறது
இந்த சம்பவ காலத்தில் அமைச்சரவை அமைச்சராக இருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பட்டலந்த சித்திரவதை தளத்தை அமைப்பதற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

ஆணைக்குழுவின் கூற்றுப்படி, பட்டலந்த பகுதியின் வீட்டுத் திட்டத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான வீடுகளை பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒதுக்குமாறு கட்டளையிட்டதன் மூலம் ரணில் விக்ரமசிங்க தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் எனவும் அந்த குடியிருப்புகள் இரகசிய தடுப்பு மற்றும் சித்திரவதை முகாம்களாக பயன்படுத்தப்படும் வகையில் அவர் நடவடிக்கைகளை மேற்கொண்டார் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

ரணில் விக்கிரமசிங்க இந்த நடவடிக்கைக்காக பயன்படுத்தியதாகக் கூறப்படும் பட்டலந்த வீட்டுத்தொகுதியில் உள்ள பி2 என நியமிக்கப்பட்ட வீட்டை சித்திரவதைக் கூடமாக பயன்படுத்தியதாக அறிக்கையில் குறிப்பிடப்படுகிறது .
அதே வீட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சொகுசு பங்களாவில் அவர் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

அதைச் சுற்றிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தாகவும் , அந்த வளாகத்தில் என்ன நடக்கிறது என்பதை பாதுகாப்பு அதிகாரிகளும் “தெரிந்திருக்க வேண்டும்” என்றும் அறிக்கையில் கூறப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்க பட்டலந்தவில் வேறொரு பாத்திரமாக செயற்பட்டதாக பல சாட்சிகள் சாட்சியமளித்ததாக பட்டலந்த விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அவர் பொலிஸ் அதிகாரிகளுடன் விவகாரம் தொடர்பான கலந்துரையாடல்களுக்கு தலைமை தாங்கினார் என்றும் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் போலீசாருக்கு நேரடி வழிகாட்டுதல்களை வழங்கியதாகவும் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பட்டலந்த வதை முகாம் நடவடிக்கைகளின் போது , பொலிஸ் பணியில் தலையிட்டடு வழிநடத்தியமை மற்றும் படலந்த கொலைப் படைகளின் வலையமைப்பை நடத்தியாதாக ரணில் விக்ரமசிங்க மீது விசாரணை அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
மக்கள் வழங்கிய ஆணையை அவர் தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த விசாரணை ஆணைக்குழு ,ரணில் விக்கிரமசிங்கவை ,”சட்டவிரோதமான தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதை அறைகளின் பராமரிப்புக்கு மறைமுகப் பொறுப்பு” என்று கூறியுள்ளது
பட்டலந்த விசாரணை அறிக்கையின் பொறுப்புக்கூறலுக்கான அழைப்புகள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்தன.

ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலமாக பல்வேறு விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டபோதிலும் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக விக்கிரமசிங்க மற்றும் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் ஏனைய அதிகாரிகளுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
பட்டலந்த விசாரணை ஆணைக்குழு வெளிப்படுத்திய உண்மைகளின் அடிப்படையில் ரணில் விசக்ரமசிங்கவின் குடிமை உரிமை பறிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.
இவ்வாறான சட்ட நடவடிக்கைகள் கடந்த காலங்களில் இலங்கையில் நிறைவேற்றப்பட்டது.

  • குறிப்பாக, முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா 1980 ஆம் ஆண்டு இதேபோன்ற விசாரணையில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததைக் கண்டறிந்த பின்னர் அவரது குடிமை உரிமைகள் பறிக்கப்பட்டன.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகே குமாரதுங்க விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை கவனத்திற்கொள்ளாது தவிர்த்ததுடன் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளையம் அமுல்படுத்த வில்லை

இந்த விடயம் தொடர்பில் சந்திரிக்காவிற்கு எதிராக அப்போது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட போது , ​​ தனது தாயாருக்கு ஏற்பட்ட அதே கதிக்கு வேறு எவரையும் உட்படுத்த, தான் விரும்பவில்லை என்று ஒரு தனிப்பட்ட காரணத்தை அவர் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)