
பஸ் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் பலி
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பஸ் மோட்டார் சைக்கிள் மோதிய வீதி உயிரிழந்ததுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் இன்று (16) காலை இடம்பெற்றுள்ளதாகவும் பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளதாக மட்டு.தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் காத்தான்குடி முகைதீன் பஸ்ளிவாசல் மௌலவியான 43 வயதுடைய சபீஸ் என்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டு. நகர் லேடி மெனிங் வீதி ஊடாக கல்லடி பாலத்து சந்தியில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்தபோது காத்தான்குடி பகுதியில் இருந்து நகரை நோக்கி பயணித்த பஸ் கல்லடிபால சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கியில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு.தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.