
பட்டலந்த அறிக்கை விவாதத்திற்கான திகதி அறிவிப்பு !
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் என நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விவாதம் இரு கட்டங்களாக நடைபெறும் என்று அதன் பட்டலந்த ஆணைக்குழுவின் செயலாளர் ஜயலத் பெரேரா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் முதல்நாள் விவாதத்தை ஏப்ரல் 10 ஆம் திகதியும், இரண்டாம் நாள் விவாதத்தை மே மாதமளவிலும் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.