ஹெரோயினுடன் ஒருவர் கைது

ஹெரோயினுடன் ஒருவர் கைது

அனுராதபுரத்தில், 21 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 100 கிராம் ஹெரோயினுடன்  சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், கிடைத்த தகவலுக்கு அடிப்படையில், குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் அனுராதபுரம், திசாவெவவ நிராவிய பகுதியில் வசிக்கும் 41 வயதானவர் எனத் தெரியவருகிறது. இந்த சந்தேக நபர் நாளை, 16ஆம் திகதி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)